Ki.Mu.Ki.Pi (Tamil)

by Madhan, மதன்

Blurb

மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல 'ஏவாள்'தான் என்கிறார்.

விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, 'அட' சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்' என 'லோக்கல்'ஆக சந்தோஷப்பட வைக்கிறார்.

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்!

Member Reviews Write your own review

Be the first person to review

Log in to comment